ஈரோடு மாநகர் பகுதியில் 2 நாட்களில் 17 பாம்புகள் பிடிபட்டன


ஈரோடு மாநகர் பகுதியில் 2 நாட்களில் 17 பாம்புகள் பிடிபட்டன
x

ஈரோடு மாநகர் பகுதியில் 2 நாட்களில் 17 பாம்புகள் பிடிபட்டன

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்தது. இதன் காரணமாக காலி இடங்களில் இருக்கும் பாம்புகள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக பாம்பு பிடி வீரர் யுவராஜிக்கு கடந்த 2 நாட்களாக ஏராளமான இடங்களில் இருந்து வீடுகளுக்குள் பாம்பு புகுந்து விட்டதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

குறிப்பாக ஈரோடு மாணிக்கம்பாளையம், சூளை, பழையபாளையம், சூரம்பட்டி வலசு, வில்லரசம்பட்டி உள்ளிட்ட பகுதியில் கடந்த 2 நாட்களில் மட்டும் 3 நாகப்பாம்பு, 14 சாரைப்பாம்பு என மொத்தம் 17 பாம்புகள் பிடிபட்டுள்ளன. பிடிபட்ட அனைத்து பாம்புகளும் ஈரோடு ரோஜா நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டன.


Next Story