ஏரியூர் அருகேவிவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது


ஏரியூர் அருகேவிவசாய நிலத்தில் மலைப்பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 12 Feb 2023 7:00 PM GMT (Updated: 2023-02-13T00:30:03+05:30)
தர்மபுரி

ஏரியூர்:

பென்னாகரம் அருகே உள்ள கவுண்டனூரில் உள்ள விவசாய நிலத்தில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை நில உரிமையாளர் செங்கோடன் பார்த்தார். இதையடுத்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், விவசாய நிலத்தின் கரையில் இருந்த சுமார் 14 அடி நீள மலைப்பாம்பை இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர். இதையடுத்து அந்த மலைப்பாம்பை ஒகேனக்கல் காப்புக்காட்டில் விட முடிவு செய்து கொண்டு சென்றனர்.


Next Story