சிவகிரியில் குடிநீர் தொட்டியில் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது


சிவகிரியில் குடிநீர் தொட்டியில் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது
x

சிவகிரியில் குடிநீர் தொட்டியில் புகுந்த 2 பாம்புகள் பிடிபட்டது

ஈரோடு

சிவகிரி

சிவகிரி குமரன் தெருவை சேர்ந்தவர் அறிவழகன். இவரது வீடு அருகே சுமார் 15 அடி உயரத்தில் உள்ள சுவரின் மேல் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தொட்டியின் அடிப்பகுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 2 கொம்பேறி மூக்கன் பாம்புகள் புகுந்து இருப்பதை அறிவழகனின் மனைவி மெர்சி நிர்மலா பார்த்துள்ளார்.

உடனே அக்கம்பக்கத்தினர் பாம்பை வெளியேற்ற முயற்சி செய்தனர். ஆனால் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள சுவரின் அடிப்பகுதியில் 2 பாம்புகளும் சென்று விட்டது. இதனால் பாம்பை விரட்ட முடியவில்லை.

இதுபற்றி நேற்று கொடுமுடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீர் தொட்டியின் அடிப்பகுதியில் இருந்த 2 பாம்புகளை லாவகமாக பிடித்தனர். பின்னர் சாக்குப்பையில் போட்டு காட்டு பகுதியில் விட்டனர்.


Next Story