சென்னிமலை அருகே கிணற்றுக்குள் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீட்பு
சென்னிமலை அருகே கிணற்றுக்குள் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீட்பு
ஈரோடு
சென்னிமலை
சென்னிமலை அருகே பி.ஆர்.எஸ். ரோட்டில் பொதுமக்கள் பயன்படுத்தும் 50 அடி ஆழ கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் தற்போது 30 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றனர். அப்போது கிணற்றுக்குள் கட்டுவிரியன் பாம்பு ஒன்று மிதந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி அவர்கள் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றனர். பின்னர் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி பாம்பு பிடிக்கும் கருவி மூலம் கட்டு விரியன் பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர். அதன்பின்னர் அந்த பாம்பை சென்னிமலை வன காவலர் மகாதேவனிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story