அம்மாபேட்டையில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு பிடிபட்டது
அம்மாபேட்டையில் வீட்டுக்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு பிடிபட்டது
அம்மாபேட்டை
அம்மாபேட்டை காமராஜ் வீதியில் வசிப்பவர் கேசவன் (வயது 52). இவர் சோப்பு ஏஜென்சிஸ் நடத்தி வருகிறார். தற்போது குடும்பத்தினருடன் நெரிஞ்சிப்பேட்டையில் வசித்துக்கொண்டு அம்மாபேட்டையில் உள்ள வீட்டில் சோப்பு பாக்கெட்டுகளை அடுக்கி வைத்து குடோனாக பயன்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடோனுக்குள் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். உடனடியாக இதுபற்றி கேசவனுக்கு தகவல் கொடுத்தனர். கேசவன் வந்து குடோனில் தேடிப்பார்த்தபோது பாம்பு கண்ணுக்கு சிக்கவில்லை. இதுபற்றி உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குடோனில் பதுங்கி இருந்த சுமார் 6 அடி நீள சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதை ஒரு சாக்கு பையில் போட்டு, அதை வனப்பகுதியில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.