நாமக்கல்லில் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பால் பரபரப்பு
நாமக்கல்:
நாமக்கல் மாருதி நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நேற்று முன்தினம் இரவு சுமார் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று சாக்கடையில் பதுங்கி இருந்தது. அதை கண்ட அந்த பகுதி மக்கள் நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போராடி பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிபட்ட பாம்பானது வனப்பகுதியில் விடப்பட்டது.
குடியிருப்பு பகுதி சரிவர பராமரிப்பின்றி, புதர்கள் மண்டி கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். எனவே புதர்களை அவ்வப்போது அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். குடியிருப்பு பகுதியில் நாகப்பாம்பு புகுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.