சென்னிமலை அருகே கிணற்றுக்குள் தத்தளித்த கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு


சென்னிமலை அருகே கிணற்றுக்குள் தத்தளித்த கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு
x

சென்னிமலை அருகே கிணற்றுக்குள் தத்தளித்த கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன். விவசாயி. இவருக்கு சொந்தமான கிணறு அதே பகுதியில் உள்ளது. 30 அடி உயரமுள்ள இந்த கிணற்றில் 20 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் இருந்து மின் மோட்டாரை இயக்குவதற்காக நேற்று காலையில் கதிரேசன் தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது கிணற்றுக்குள் எட்டி பார்த்த போது அங்கு தண்ணீரில் பாம்பு ஒன்று தத்தளித்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி பாம்பை லாவகமாக பிடித்து மேலே கொண்டு வந்தனர். பிடிபட்டது சுமார் 4½ அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்று தீயணைப்புதுறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பாம்பை ஒரு சாக்கு பையில் போட்டு அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.


Next Story