பாம்பு கடித்து பட்டதாரி பெண் சாவு


பாம்பு கடித்து பட்டதாரி பெண் சாவு
x

ஒரத்தநாடு அருகே பாம்பு கடித்து பட்டதாரி பெண் இறந்தார்.

தஞ்சாவூர்

ஒரத்தநாடு;

ஒரத்தநாடு அருகே பாம்பு கடித்து பட்டதாரி பெண் இறந்தார். கணவர் இறந்த 3 மாதங்களில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருமணம்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள சாமிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் மணிவாசகம். இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது30). எம்.எஸ்சி. பட்டதாரியான இவருக்கும், வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்த நரசிம்மன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு நரசிம்மன் திடீரென இறந்தார்.

பாம்பு கடித்தது

நரசிம்மன் இறந்ததை தொடர்ந்து அவரது மனைவி சிவரஞ்சனி கடந்த 3 மாதங்களாக சாமிபட்டியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.கடந்த 19-ந் தேதி இரவு சிவரஞ்சனி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் சிவரஞ்சனியை விஷப்பாம்பு கடித்தது.இதனால் சிவரஞ்சனியை அவரது உறவினர்கள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவரஞ்சனி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிவரஞ்சனியின் தந்தை மணிவாசகம் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்து 3 மாதங்களில் இளம் பெண் பாம்பு கடித்து இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story