பாம்பு கடித்து விவசாயி சாவு


பாம்பு கடித்து விவசாயி சாவு
x

பாம்பு கடித்து விவசாயி பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சி பிரதான சாலையில் வசித்து வந்தவர் முத்துசாமி (வயது41). விவசாயி. இவருக்கு திருமணமாகி பரிமளா (38) என்ற மனைவியும், மேதா(15), பிரகதி(13) என 2 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை முத்துசாமி குரும்பலூர் ஆலடியான் கோவில் அருகே உள்ள தனது வயலுக்கு சென்று மாட்டிற்கு வைக்கோல் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்துள்ளது. உடனே இதுகுறித்து முத்துசாமி, தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து முத்துசாமியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்று பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். முத்துசாமியின் உடல் அரசு மருத்துவமனை பிரேத கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story