பாம்பு கடித்து இளம்பெண் பலி


பாம்பு கடித்து இளம்பெண் பலி
x

பாணாவரம் அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலியானார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

பாணாவரம் மாலைமேடு ரோட்டு தெருவை சோ்ந்தவா் மனோகரன். இவரது மனைவி ராணி. இவா்கள் மாலைமேடு ரோட்டில் பெட்டி கடைவைத்து நடத்தி வருகின்றனர். இவா்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் லட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டார். இரண்டாவது மகள் நேத்திரா (வயது 29) பெட்டிகடையை தனது தந்தைக்கு துணையாக கவனித்து வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டின் அருகே விஷபாம்பு நேத்திராவை கடித்துள்ளது.

அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பாம்பு கடிக்கான மருந்து இல்லை என கூறப்படுகிறது. இதனால் சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பாணாவரம் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story