அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது


அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:45 PM GMT)

குருந்தன்கோடு அருகே அங்கன்வாடி மையத்தில் புகுந்த பாம்பு பிடிபட்டது

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்,

குருந்தன்கோடு அருகே மாவிளையில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதியில் உள்ள குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று மதியம் அங்கன்வாடி மைய சுவரில் இருந்த ஓட்டை வழியாக ஒரு நல்ல பாம்பு உள்ளே புகுந்தது. இதை பார்த்த அங்கன்வாடி ஆசிரியை லீமா குழந்தைகளை பாதுகாப்பாக வெளியேற்றினார். பின்னர் இதுகுறித்து திங்கள்சந்தை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய சிறப்பு அலுவலர் ஜாண் வின்ட் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து பாம்பை பிடித்து சென்றனர். இந்த மையத்தில் ஏற்கனவே 2 முறை பாம்பு புகுந்து குழந்தைகளை அச்சுறுத்தியுள்ளது. எனவே அங்கன்வாடி மையத்தில் பாம்பு புகுவதை தடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தினர்.


Next Story