வீட்டுக்குள் புகுந்த பாம்பு
வீட்டுக்குள் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்
திருவாரூர்
திருவாரூர்:-
திருவாரூர் அருகே உள்ள அலிவலம் பகுதியை சேர்ந்தவர் செல்வகணபதி. இவர் திருவாரூர் விஜயபுரம் கடைத்தெருவில் கெடிகாரம் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருடைய வீட்டில் 6 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியில் ஓடிவந்தனர். இதுகுறித்து திருவாரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்குள் மின் மீட்டர் பெட்டிக்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.
Related Tags :
Next Story