வீடுகளில் புகுந்த பாம்புகள்


வீடுகளில் புகுந்த பாம்புகள்
x

நாமக்கல்லில் வீடுகளில் புகுந்த பாம்புகளை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

நாமக்கல்

நாமக்கல் டவுன் செம்பாளி கரடு அருகே வசித்து வருபவர் ரவிக்குமார். வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவரது வீட்டிற்குள் சுமார் 4 அடி நீள பாம்பு ஒன்று புகுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ரவிக்குமார் மற்றும் குடும்பத்தினர் நாமக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு படை வீரர்கள் ½ மணி நேர போராட்டத்திற்கு பின்பு பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

அதேபோல் ராசிபுரம் டவுன் கோனேரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் தனது வீட்டில் டிரம்மில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். இந்த நிலையில் தண்ணீர் பீப்பாய் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் 5 அடி நீளம் கொண்ட கரு நாகப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று கரு நாகப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் பாம்பை போதமலை அடிவார காப்பு காட்டு பகுதியில் விட்டனர். இதேபோல் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்த மும்தாஜ் பேகம் என்பவரது ஓட்டு வீட்டில் புகுந்து கொண்ட 10 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை ராசிபுரம் வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.


Next Story