வனக்குற்றங்களை தடுக்க முதல் முறையாக மோப்ப நாய்


வனக்குற்றங்களை தடுக்க முதல் முறையாக மோப்ப நாய்
x
தினத்தந்தி 4 Aug 2023 7:30 PM GMT (Updated: 4 Aug 2023 7:30 PM GMT)

வனக்குற்றங்களை தடுக்க முதல் முறையாக மோப்ப நாய்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பமானது பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்டங்களை கொண்டது. இதில் பொள்ளாச்சி கோட்டத்தில் உலாந்தி, பொள்ளாச்சி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வன குற்றங்களை தடுக்கவும், வனக்குற்றங்களின் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கவும் முதல் முறையாக பைரவா என்ற ஒரு வயதான டாபர்மேன் வகையை சார்ந்த மோப்பநாய் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நாய்க்கு பொள்ளாச்சி வனத்துறை அலுவலகத்தில் தனியாக இடவசதி, பயிற்சி அளிக்கவும் போதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளன. சிறப்பு வேட்டை தடுப்பு காவலர்கள் கணபதி, நாராயணன் ஆகியோர் மோப்ப நாய்க்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, தமிழக வனத்துறையில் முதல் முறையாக டாபர்மேன் வகை மோப்பநாய் சேர்க்கப்பட்டு உள்ளது. பொள்ளாச்சிக்கு வந்துள்ள இந்த வகை நாய்க்கு நீச்சல், மோப்பம் பிடித்தல், ஒழுங்கு நடவடிக்கை போன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நாயை கொண்டு அவுட்டுக்காய் போன்ற வெடிப்பொருட்கள், கஞ்சா சாகுபடியை கண்டுபிடிக்கலாம். பயிற்சியாளர்களை தவிர வேறு யார் உணவு கொடுத்தாலும் சாப்பிடாது. வனப்பகுதியில் ரோந்து செல்லவும், வாகன சோதனைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.


Next Story