இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல்


இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல்
x

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதுவரை 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல்

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள நெம்பர் 10 முத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவி, குருெநல்லிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி, சொக்கனூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவி, நல்லட்டிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதற்கு ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கியது.

இதில் நெம்பர் 10 முத்தூர் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு இன்று வரை 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நல்லட்டிபாளையம் கிராம ஊராட்சி 4-வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேரும், குருநெல்லிபாளையம் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், சொக்கனூர் கிராம ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாளை பரிசீலனை

வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. வேட்புமனுக்களை வருகிற 30-ந் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம். அதன்பின்னர் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். வாக்குப்பதிவு அடுத்த மாதம்(ஜூலை) 9-ந் தேதி காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது. 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தகவலை தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி தெரிவித்தார்.



Next Story