எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ் படிப்பிற்கு இதுவரை 12,429 மாணவர்கள் விண்ணப்பம்


எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ் படிப்பிற்கு இதுவரை 12,429 மாணவர்கள் விண்ணப்பம்
x

எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ் படிப்பிற்கு இதுவரை 12,429 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

2022-23-ம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ (பி.டி.எஸ்.) படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள், சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் சேர்வதற்கான இணையதள விண்ணப்பபதிவு 22-ந் தேதி முதல் தொடங்கியது.

மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எம்.பி.பி.எஸ் - பி.டி.எஸ் படிப்பிற்கு இதுவரை 12,429 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 8,177 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள் அக்டோபர் 3-ந் தேதி என்பதால் வரும் நாட்களில் ஏராளமானோர் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story