சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் 200 கிலோ பாரம்பரிய நெல் இருப்பு வைப்பு-ஆனைமலை வேளாண் அதிகாரி தகவல்


சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில்  200 கிலோ பாரம்பரிய நெல் இருப்பு வைப்பு-ஆனைமலை வேளாண் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 18 Sep 2022 7:00 PM GMT (Updated: 18 Sep 2022 7:00 PM GMT)

சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் 200 கிலோ பாரம்பரிய நெல் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக ஆனைமலை வேளாண் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

ஆனைமலை

சிறு, குறு விவசாயிகள் வாங்கி பயன்பெறும் வகையில் 200 கிலோ பாரம்பரிய நெல் இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக ஆனைமலை வேளாண் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக நெல், நிலக்கடலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பெய்த தென் மேற்கு பருவமழையின் காரணமாக ஆனைமலை பகுதியில் உள்ள குளம், குட்டைகளில் நீர்நிரம்பி உள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்து உள்ளது. அதனால் விவசாயிகள் தற்போது நெல்லை பயிரிட தொடங்கி உள்ளனர். இதையடுத்து விவசாயிகள் நெல் விதைகள் வாங்க ஆர்வமாக உள்ளனர். அதன்படி ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மைத்தில் உள்ள நெல் விதைகளை வாங்க வேளாண் அதிகாரிகள் அழைப்பு விடுத்து உள்ளனர்.

200 கிலோ நெல் இருப்பு

இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது:- ஆனைமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் வகைகள் 200 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் கருப்பு கவுனி 60 கிலோ மற்றும் சீரக சம்பா 140 கிலோ விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் 25 ரூபாய்க்கு விற்கப்படும் பாரம்பரிய விதைகள் அரசு மானிய விலையில் 12 ரூபாய் 50 காசுகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு 10 கிலோ வரை நெல் விதைகள் வழங்கப்படுகிறது. இதனை சிறு குறு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story