100 நாள் வேலைத்திட்ட சமூக தணிக்கை


100 நாள் வேலைத்திட்ட சமூக தணிக்கை
x
தினத்தந்தி 24 March 2023 12:15 AM IST (Updated: 24 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை தாலுகா கூகுடி ஊராட்சியில் 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடர்பான சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்

தொண்டி

திருவாடானை தாலுகா கூகுடி ஊராட்சியில் 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற பல்வேறு வளர்ச்சி பணிகள் தொடர்பான சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் வட்டார வள பயிற்றுனர் பாண்டீஸ்வரன் தலைமையில் சமூக தணிக்கையாளர்கள் ஜெயந்தி, விஜயராணி, நீலவேணி, சத்யா, சரளாதேவி ஆகியோர் கொண்ட குழுவினர் முதற்கட்டமாக ஊராட்சி அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து குடியிருப்பு அளவில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. பின்னர் 100 நாள் வேலைத்திட்ட ஆவணங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதைதொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்த பயனாளிகளை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து கையொப்பங்கள் பெறப்பட்டது. அதன்பின்னர் பணிகள் நடைபெற்ற இடங்களில் பணிகள் சரியான முறையில் நடைபெற்று இருக்கின்றதா என்பதனை கண்டறியும் வகையில் பல அளவீடு செய்யப்பட்டது. இறுதியாக சமூக தணிக்கை அறிக்கை தயாரிப்பு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஊராட்சி அளவிலான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வட்டார வள பயிற்றுனர் பாண்டீஸ்வரன், கூகுடி ஊராட்சி தலைவர் சரவணன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட களப்பணியாளர்கள் சமூகத் தணிக்கையாளர்கள் ஊராட்சி செயலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story