குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவை நிறுத்தி பிரதமர் மோடி சமூகநீதி காவலர் என நிரூபித்துள்ளார்-பரமத்திவேலூரில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பேட்டி


குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவை நிறுத்தி பிரதமர் மோடி சமூகநீதி காவலர் என நிரூபித்துள்ளார்-பரமத்திவேலூரில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பேட்டி
x

குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவை நிறுத்தி பிரதமர் மோடி சமூகநீதி காவலர் என நிரூபித்துள்ளார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூரில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நாமக்கல் மாவட்ட பா.ஜனதா கூட்டம் நடந்தது. பா.ஜனதா மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உள்நாடு மற்றும் வெளிநாடு பாதுகாப்பில் உயர் முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பிரதமர் அறிவித்துள்ள அக்னிபத் திட்டம் நமது நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு அடித்தளமிட்டுள்ளது. ராணுவத்தில் அக்னி வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி பிரதமர் புதிய புரட்சியை படைத்துள்ளார். அக்னி வீரர்கள் பணிக்காலத்தை நிறைவு செய்தாலும், தொடர்ந்து ராணுவம் உள்ளிட்ட பிற துறைகளில் வேலை செய்யலாம். ஆனால், தி.மு.க. அரசு, ஆசிரியர்களை மிக குறைந்த சம்பளத்தில் பணி அமர்த்த அறிவிப்பு வெளியிட்டு விட்டு, அக்னிபத் திட்டத்தை குறை கூறுவது முறையல்ல. குடியரசு தலைவர் தேர்தலில் திரவுபதி முர்முவை நிறுத்தியதன் மூலம் பிரதமர் மோடி சமூகநீதி காவலர் என நிரூபித்துள்ளார் என்றார்.


Related Tags :
Next Story