சமூக நீதி நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்


சமூக நீதி நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்
x

சோகனூர், கீழ் வெண்பாக்கம் மற்றும் ஆற்காட்டில் சமூகநீதி நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

சோகனூர்

அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தில் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையம் சார்பில் இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையில் சமூக நீதி மற்றும் நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் இமைகள் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, தாசில்தார் சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, தொடர்ந்து இமைகள் திட்டத்தின் மூலம் பொது வெளியிலோ, குடும்பத்திலோ, பள்ளியிலோ ஏற்படக்கூடிய பாலியல் தொந்தரவு குறித்தும், அதுபோன்று பிரச்சினைகள் ஏற்படாமல் தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் விளக்கினர்.

மேலும், பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் காவல் துறையினரை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் விழப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் நல்லிணக்க உறுதி மொழி எடுத்தனர். அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தர், கிராம நிர்வாக அலுவலர்கள் கலைவாணன், ராமலிங்கம், மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

கீழ்வெண்பாக்கம்

நெமிலி காவல் நிலையத்திற்குட்பட்ட கீழ்வெண்பாக்கம் கிராமத்தில் நடந்த கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிரியதர்ஷினி, கீழ்வெண்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிலம்பரசன், புள்ளியல் ஆய்வாளர் ரேகா, கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரன், நெமிலி சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

ஆற்காடு

ஆற்காடு அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமை தாங்கினார். தாசில்தார் வசந்தி முன்னிலை வகித்தார். சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வரவேற்று பேசினார். முகாமில் நகர மன்ற உறுப்பினர்கள் செல்வம், குணாளன், சப்-இன்ஸ்பெக்டர்கள் விநாயகமூர்த்தி, அமரேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.


Next Story