பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சமூகநீதி போலீஸ் ஐ.ஜி. ஆய்வு


பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சமூகநீதி போலீஸ் ஐ.ஜி. ஆய்வு
x

பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சமூகநீதி போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

தமிழகத்தில் சிறந்த முறையில் செயல்படும் போலீஸ் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருதுக்கு நெல்லை மாநகர போலீஸ் சார்பில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆய்வு செய்ய சென்னை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் போலீஸ் ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா நேற்று பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவரை கமிஷனர் ராஜேந்திரன், மேற்கு துணை கமிஷனர் சரவணகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் அனைத்து ஆவணங்கள், போலீசார் மேற்கொள்ளும் பணி விவரங்கள், வழக்கு நிலவரங்கள், கோப்புகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வு ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. ஆய்வு நிறைவு பெற்று மேலிடத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்ட பின்பு, சிறந்த போலீஸ் நிலையம் குறித்து அறிவிப்பு வெளியாகவுள்ளது.


Next Story