திமுக சார்பில் ஏப்ரல் 3-ம் தேதி சமூகநீதி கருத்தரங்கு..!
திமுக சார்பில் ஏப்ரல் 3-ம் தேதி சமூகநீதி தொடர்பான கருத்தரங்கு நடைபெற உள்ளது.
சென்னை,
திமுக சார்பில் ஏப்ரல் 3-ம் தேதி சமூகநீதி தொடர்பான கருத்தரங்கு நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்த்தை காணொலி வாயிலாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. சமூக நீதிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
கருத்தரங்கிறகு தேசிய. மாநில கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. கருத்தரங்கில் 20-க்கும் மேலான தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளதா? என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தேசிய அரசியலில் இந்த கருத்தரங்கம் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story