சமூக சீர்திருத்த பொதுக்கூட்டம்


சமூக சீர்திருத்த பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே பொட்டல்புதூரில் சமூக சீர்திருத்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென்காசி

கடையம்:

பொட்டல்புதூர் ஜாக் அமைப்பு மற்றும் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் பொட்டல்புதூர் சந்தை பொட்டல் திடலில் சமூக சீர்திருத்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜாக் அமைப்பின் பொட்டல்புதூர் கிளை தலைவர் முஹம்மது யூசுப் மிஸ்பாகி தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் இஸ்மாயில், பொருளாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய அழைப்பாளர் யாசிர் பிர்தவுசி, பிர்தவ்ஸிய்யா அரபிக்கல்லூரி பேராசிரியர் காஜா முஹைதீன் பிர்தவுசி ஆகியேர் உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக ஜாக் அமைப்பின் முன்னாள் மாநில தலைவர் கமாலுதீன் மதனி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இஸ்லாமிய அழைப்பாளர் ஷம்சுல்குதா பிர்தவுசி நன்றி கூறினார். கிளைச் செயலாளர் சாகுல் ஹமீது தீர்மானங்களை வாசித்தார்.


Next Story