பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறிய அமைச்சர் கீதா ஜீவன்


பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு பரிமாறிய அமைச்சர் கீதா ஜீவன்
x
தினத்தந்தி 20 Aug 2022 10:57 AM GMT (Updated: 20 Aug 2022 11:17 AM GMT)

முதுகுளத்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சத்துணவு பரிமாறினார்.

முதுகுளத்தூர்,

தூத்துக்குடியில் இருந்து சாயல்குடி, முதுகுளத்தூர் வழியாக காரில் வந்த சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழக்கன்னிசேரி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் சத்துணவுக்கூடம் பள்ளி வகுப்பறைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

அங்கு சத்துணவு கூடத்தில் சமைத்த உணவை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் மாணவ-மாணவியருக்கு உணவை பரிமாறினார்கள். சத்துணவு சாப்பிடும் மாணவ மாணவியரிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா என்றும் தரமாக உள்ளதா என்றும் கேட்டிருந்தார்.

முன்னதாக முதுகுளத்தூர் அருகே உள்ள ஒருவனேந்தல் கிராமத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறையின் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து விளங்களத்தூர் கிராமத்தில் உள்ள அவார்ட் டிரஸ்ட் பசுமை குடில் குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகத்தில் அமைச்சர் பார்வையிட்டார். மேலும் முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் வசதிகள் குறித்து கேட்டிருந்தார். அங்கு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பவானி ராஜேந்திரன், அரசு அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Next Story