அரசு பள்ளியில் சமூக உணர்வியல் கற்றல் திட்டம் தொடக்கம்


அரசு பள்ளியில் சமூக உணர்வியல் கற்றல் திட்டம் தொடக்கம்
x

அரசு பள்ளியில் சமூக உணர்வியல் கற்றல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கரூர்

இந்தியாவின் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனமான பூமி, ஆஷ்ரயா ஹஸ்தா அறக்கட்டளையுடன் (ஏ.எச்.டி.) கூட்டு சேர்ந்துள்ளது. கரூர் மற்றும் சென்னை முழுவதும் உள்ள 16 பள்ளிகளில் கல்வி பாடத்திட்டங்களுடன் ஒருங்கிணைந்த அங்கமாக சமூக மற்றும் உணர்ச்சி கற்றலை (எஸ்.இ.எல்.) உறுதிப்படுத்தவும், முன்னோக்கி படிகளை அமைக்கிறது. ஏ.எச்.டி.-யின் விலைமதிப்பற்ற ஆதரவுடன், இந்த பள்ளிகளுக்குள் இருக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் தனிப்பட்ட மற்றும் வாழ்வு முறை சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு தேவையான கருவிகள் மற்றும் ஆதரவுகளை வழங்க, பூமி பணிகளை மேற்கொள்கிறது.

மேலும், இந்த கூட்டாண்மை குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிப்பதை வலியுறுத்துகிறது.கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 17-ந்தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.மணிவண்ணன் தலைமை தாங்கினார். உதவி கல்வி அலுவலர் சகுந்தலா, ஆஷ்ரயா ஹஸ்தா அறக்கட்டளையை சேர்ந்த சோனியா பெர்னாண்டஸ் மற்றும் சூசன் ஜெய்சன், பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இளம் கற்பவர்களுக்கு வாழ்க்கை திறன்கள், உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் அவர்களின் மதிப்புகளை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், அவர்களை சுய விழிப்புணர்வு மற்றும் மீள்தன்மை கொண்டவர்களாக மாற்றுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.


Next Story