3 பேருக்கு சோடாபாட்டில் குத்து
கோவில் திருவிழா தகராறில் 3 பேருக்கு சோடாபாட்டில் குத்து விழுந்தது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்
ஒரத்தநாடு:
திருவோணத்தை அடுத்துள்ள செவ்வாய்ப்பட்டி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி உத்திர திருவிழா கடந்த சில தினங்களாக நடைபெற்று முடிந்தது. இந்த திருவிழா சம்பந்தமாக இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று செவ்வாய்ப்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த முத்துலிங்கம் (வயது65), அவரது மகன் திருச்செல்வம் (26) மற்றும் சிங்காரவேல் (48) ஆகிய 3 பேரையும் அதே ஊரைச்சேர்ந்த பழனிவேல் மகன் முருகேசன் என்பவர் சோடா -பாட்டிலால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த திருச்செல்வம் உள்ளிட்ட 3 பேரும் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருச்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story