பொள்ளாச்சியில் மண் வள பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன


பொள்ளாச்சியில் மண் வள பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்-  வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
x

பொள்ளாச்சியில் மண் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மண் வள பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மண் வள பாதுகாப்பு

உலகில் இந்தியா உள்பட பெரும்பாலான நாடுகள் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிப்பதற்காக ரசாயன உரங்களை மிக அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக மண்வளம் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் மண் மலட்டுதன்மை அடைகிறது. இதனால், ரசாயன உரங்களை முடிந்தவரை பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கை உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை பாதுகாக்க வேண்டும் என உலக அளவில் சுற்றுசூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கு முன்னோடி விவசாயிகள் செவிசாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் பல இளம் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பொள்ளாச்சியில் மாரத்தான்

இந்தநிலையில், மண் வளத்தை காப்பது தொடர்பாக பொள்ளாச்சியில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாரத்தான் ஓட்டம் பொள்ளாச்சி தடகள சங்கம் சங்கம் சார்பில் நடந்தது. இந்த மாரத்தானில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர் 'மண் காப்போம்' என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து உற்சாகமாக ஓடினர். 5 வயது முதல் 10 வயது வரை, 11 வயது முதல் 18 வயது வரை, 18 வயதுக்கு மேற்பட்டோர் என 3 பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. இதில் இளம்பெண்கள் பலர் கலந்துகொண்டு ஓடினார்கள்.

பொள்ளாச்சியில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பி.ஏ. கல்லூரியில் நிறைவு பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பொள்ளாச்சி தடகள சங்கத்தின் தலைவர் கண்ணன், செயலாளர். சுரேஷ்குமார் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.


Next Story