அரசு வேளாண்மை கல்லூரியில் மண் வள தின விழா


அரசு வேளாண்மை கல்லூரியில் மண் வள தின விழா
x

அரசு வேளாண்மை கல்லூரியில் மண் வள தின விழா நடந்தது.

திருவண்ணாமலை

வாணாபுரம்,

அரசு வேளாண்மை கல்லூரியில் மண் வள தின விழா நடந்தது.

வாணாபுரம் அருகே உள்ள வாழவச்சனூரில் அரசு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் நேற்று மண் வள தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் ஹரக்குமார் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி முன்னிலை வகித்தார்.

பேராசிரியர் பாபு, மண் ஆய்வின் முக்கியத்துவம் அதனை சாகுபடிக்கு பயன்படுத்துவதன் அவசியம் குறித்து ஆலோசனைகளை வழங்கினார். பேராசிரியர்கள் அருண்குமார், யுவராஜ், கிருஷ்ணவேணி ஆகியோர் மண்வள மேலாண்மை குறித்தும் மண் வளத்தை மேம்படுத்துவது குறித்தும் பேசினர்.

பூச்சிகள் துறை பேராசிரியர் துரைசாமி மண்ணில் இருந்து வரும் பூச்சிகள் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது மட்டுமல்லாமல் செயல் விளக்கங்களையும் விவசாயிகளுக்கு காட்டப்பட்டது.

இதில் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் இணை பேராசிரியர் ஜமுனா நன்றி கூறினார்.


Next Story