விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விழிப்புணர்வு


விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விழிப்புணர்வு
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் இளங்கலை வேளாண் மாணவிகள் பொள்ளாச்சி அருகே ஆழியாறில் விவசாயிகளுக்கு பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். புளியங்கண்டியில் உள்ள ஒரு தோட்டத்தில் மண் பரிசோதனை மற்றும் நீர் பரிசோதனை எடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பரிசோதனைக்கு மண் சேகரிப்பு முறை குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர்.

அதன்படி நிலத்தில் 30 செ.மீ. ஆழத்தில் வி வடிவ வெட்டு ஏற்படுத்தி பிளாஸ்டிக் பையில் ஒரு கிலோ மண்ணை சேகரிக்க வேண்டும். இவ்வாறு ஒரு ஏக்கரில் 4 முதல் 5 இடங்களில் மண் மாதிரியை சேகரிக்க வேண்டும். சேமித்த 4 முதல் 5 கிலோ மண்ணை கால் பங்காக்கி பகுதியிடுதல் மூலமாக ஒரு கிலோ மண் மாதிரியாக குறைத்து பரிசோதனைக்கு பயன்படுத்தலாம். மண் பரிசோதனை செய்வதற்கு ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தை அணுகலாம் என்று மாணவிகள் தெரிவித்தனர்.


Next Story