சோலார் பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கை-ஊர் பெயர்கள் பொருத்தும் பணி தீவிரம்


சோலார் பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கை-ஊர் பெயர்கள் பொருத்தும் பணி தீவிரம்
x

சோலார் பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கை, ஊர் பெயர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.

ஈரோடு

சோலார்

சோலார் பஸ் நிலையத்தில் பயணிகள் இருக்கை, ஊர் பெயர்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.

சோலார் பஸ் நிலையம்

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து ஈரோடு மாவட்டமின்றி சேலம், கோவை, திருப்பூர், பழனி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு பஸ் நிலையம் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது.

இதையடுத்து தென்மாவட்டங்களில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ்கள் நிற்க வசதியாக ஈரோடு அருகே சோலார் பகுதியில் புதிதாக பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பகுதியில் தரைகள் சமன் செய்யப்பட்டு பஸ்கள் நிற்க தனித்தனி டிராக்குகள், பயணிகள் அமர இருக்கைகள், கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுகிறது.

பணிகள் தீவிரம்

மேலும் ஊர் பெயர்கள் பொருத்துதல், பயணிகள் அமரும் இருக்கைகள், மின்சாரம் ஆகிய வசதிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். இந்த பணிகள் அனைத்தும் முடிந்ததும் விரைவில் சோலார் பஸ் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

இந்த பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story