பஸ் நிலையத்தில் உயர் கோபுர சோலார் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்
அதிராம்பட்டினம் நகராட்சி பஸ் நிலையத்தில் உயர் கோபுர சோலார் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினம் நகராட்சி பஸ் நிலையத்தில் உயர் கோபுர சோலார் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைந்த வெளிச்சம்
அதிராம்பட்டினம் நகராட்சி பஸ் நிலையத்தில் உயர் கோபுர மின் கம்பத்தின், மின் விளக்கு குறைந்த அளவே வெளிச்சம் உள்ளதால் பயணிகள் இரவு நேரங்களில் அவதிப்படுகின்றனர். மின் தடை நேரங்களில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிராம்பட்டினம் நகராட்சியை சுற்றிலும் ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ராஜா மடம், மகிழங்கோட்டை, கருங்குளம், கரிசைக்காடு, வள்ளிகொல்லைக்காடு, உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.
சோலாா் மின் விளக்குகள்
இக்கிராமங்களை சேர்ந்த ,தொழிலாளர்கள் அதிராம்பட்டினத்துக்கு வந்து, அங்கிருந்து பஸ் பிடித்து, முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, பட்டுக்கோட்டை, துவரங்குறிச்சி, மதுக்கூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு மீண்டும் அதிராம்பட்டினத்துக்கு வந்து, அங்கிருந்து பஸ் பிடித்து வீடு திரும்புகின்றனர். இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் கம்பத்தில் மின்விளக்கு குறைந்த அளவே வெளிச்சம் இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மின்தடை நேரங்களில் அப்பகுதியில் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது. இதனால் வழிப்பறி கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிராம்பட்டினம் பஸ் நிைலயத்தில் உயர் கோபுர சோலார் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.