ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசாா் கைது செய்தனா்.
ஈரோடு
ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த ரவி (வயது 50), தரனேஷ் (21), ஈரோடு மூலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த் (50), பவானியை சேர்ந்த நிர்மலா (35) ஆகியோர் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து 800, மற்றும் 2 கார்கள், 2 மோட்டார்சைக்கிள்கள், 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story