தூய அலங்கார அன்னை பேராலய பெருவிழா


தூய அலங்கார அன்னை பேராலய பெருவிழா
x

கும்பகோணம் தூய அலங்கார அன்னை பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் அலங்கார அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதத்தில் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கும்பகோணம் காமராஜர் ரோடு மற்றும் பேராலயத்தை சுற்றி கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி கொடியை ஏற்றி வைத்தார். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிலோமின்தாஸ் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story