திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி


திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை ஜெயேந்திரா பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் செங்கோட்டை நகராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு பயிற்சி நடந்தது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளா் ராம்மோகன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வா் ராணி ராம்மோகன், நகராட்சி ஆணையாளா் பார்கவி, சுகாதார அலுவலா் ராமச்சந்திரன், சுகாதார ஆய்வாளா் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் கார்த்திக் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து பள்ளி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்தும், திடக்கழிவுகளை எவ்வாறு பயனுள்ள உரங்களாக மாற்றுவது குறித்தும் பயிற்சி அளித்தனா்.

பின்னா் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணா்வு ஊர்வலம் நடந்தது. பின்னா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணா்வு திடக்கழிவு மேலாண்மை குறித்த ஓவியப்போட்டி, வினாடி-வினா, கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செங்கோட்டை நகர்மன்ற தலைவா் ராமலெட்சுமி, நகராட்சி ஆணையாளா் பார்கவி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தி பேசினா்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினா் மேரிஅந்தோணிராஜ், சுகாதார மேற்பார்வையாளா்கள் முத்துமாணிக்கம், காளியப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி ஆசிரியா் முருகன் நன்றி கூறினார்.



Next Story