கோத்தகிரி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்


கோத்தகிரி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்

நீலகிரி


கோத்தகிரி


நீலகிரி மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, குப்பைகள் 100 சதவீத மறுசுழற்சி, குடிநீர் விநியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவற்றில் முன் மாதிரி பேரூராட்சியாக திகழும் கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் ஓவேலி, தேவர்சோலை, நடுவட்டம், சோலூர், கேத்தி உள்ளிட்ட 5 பேரூராட்சிகளை சேர்ந்த அலுவலர்கள் 25 பேருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.


கோத்தகிரி பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில், கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் பயிற்சியில் பங்கேற்ற அலுவலர்களுக்கு குப்பைகளை தரம் பிரித்தல், மக்கும் குப்பைகளை கொண்டு இயற்கை உரம் தயாரித்தல், வாழை இலைகளை எந்திரங்கள் மூலம் அரைத்து உரமாக்குதல், மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை எந்திரங்கள் மூலம் சிறு துகள்களாக மாற்றி தார்ச்சாலைகள் போட தாருடன் சேர்க்க அனுப்பி வைப்பது, மக்காத குப்பைகளை சிறப்பு எந்திரம் மூலம் எரித்து அந்த சாம்பலை சிமெண்ட் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுப்பி வைப்பது, துணிப் பை உபயோகம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது உள்ளிட்டவற்றை குறித்து செயல் விளக்கம் மூலம் செய்து காண்பித்து பயிற்சி அளித்தனர்.



Next Story