சோமநாதர் கோவில் கும்பாபிஷேகம்


சோமநாதர் கோவில் கும்பாபிஷேகம்
x

கீரப்பாளையம் சோமநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடலூர்

புவனகிரி,

புவனகிரி அருகே கீரப்பாளையத்தில் திரிபுரசுந்தரி சமேத சோமநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட யாகசாலையில் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னா் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story