தந்தையை தாக்கிய மகன் கைது


தந்தையை தாக்கிய மகன் கைது
x

பாளையங்கோட்டை: தந்தையை தாக்கிய மகன் கைது

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை சீவலப்பேரி அருகே உள்ள குப்பக்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி (வயது 85). இவருடைய மகன் முருகன் (40). சம்பவத்தன்று 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முருகன், மாடசாமியிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டு, அவதூறாக பேசி தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து முருகனை நேற்று கைது செய்தார்.


Next Story