தந்தையை தாக்கிய மகன் கைது


தந்தையை தாக்கிய மகன் கைது
x

தந்தையை தாக்கிய மகன் கைது

திருநெல்வேலி

நெல்லை:

சீவலப்பேரி அருகே உள்ள பாலாமடை வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 62). இவருடைய மகன் ஆறுமுககனி (35). இவர் மது அருந்திவிட்டு அடிக்கடி சங்கரனிடம் தகராறு செய்து வந்தார். இந்தநிலையில் ஆறுமுககனி நேற்று சங்கரனிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்காததால் அவதூறாக பேசி அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கரன் சீவலப்பேரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து, ஆறுமுககனியை நேற்று கைது செய்தார்.


Next Story