தந்தையை தாக்கிய மகன் கைது


தந்தையை தாக்கிய மகன் கைது
x

பேட்டையில் தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பேட்டை:

பேட்டை எம்.ஜி.பி. இரண்டாவது வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது முத்து மைதீன். இவரது மகன் இப்ராகிம் ராசிக் (வயது 19). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் இப்ராகிம் ராசிக் மதுகுடிப்பதற்கு தந்தையிடம் பணம் கேட்டார். ஆனால் முகமது முத்து மைதீன் பணம் கொடுக்க மறுத்து கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த இப்ராகிம் ராசிக், தனது தந்தையை பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து இப்ராகிம் ராசிக்கை கைது செய்தார்.


Next Story