தந்தையை தாக்கிய மகன் கைது
நாங்குநேரி அருகே தந்தையை தாக்கிய மகனை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே பட்டர்புரத்தை சேர்ந்தவர் முத்தையா (வயது 64) ஓய்வு பெற்ற தலையாரி. இவருக்கு 3 மனைவிகள். அவர்களில் முதல் இரண்டு மனைவிகள் இறந்துவிட்டனர். தற்போது 3-வது மனைவி தனலட்சுமி என்பவருடன் பெருமளஞ்சி ஊரில் வசித்து வருகின்றார்.
முதல் மனைவி பூலம்மாள் என்பவருக்கு பிறந்த மகன் அல்லாத்தான் (34). இவர் முத்தையாவுக்கு பூர்வீகமாக உள்ள இரண்டு வீடுகளில் ஒரு வீட்டில் தங்கி வருகிறார். மற்றொரு வீட்டை முத்தையா கடந்த 2 வருடத்திற்கு முன்பு விற்பனை செய்துள்ளார்.
இந்தநிலையில் 2 வீடுகளும் தனக்கு வேண்டும் என கேட்டு முத்தையாவிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அல்லாத்தான், முத்தையாவை தாக்கியுள்ளார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லாத்தானை கைது செய்தனர்.
Related Tags :
Next Story