சொத்துக்காக தாயை வெட்டி கொன்ற மகன்...! தந்தை உயிர் ஊசல்...!
நேற்று நள்ளிரவிலும் பெற்றோருடன் சொத்துக்கள் தொடர்பாக மோகன்தாஸ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே திட்டுவிளை பகுதியில் வசித்து வருபவர்கள் பவுல் (73) மற்றும் அமலோத்பதும். வயதான தம்பதிகளான இவர்களுக்கு மோகன்தாஸ் (51) என்ற மகன் உள்ளார்.
இந்த வயதான தம்பதியர் தங்களது சொத்துகளை மகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு சொத்துக்கள் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் மோகன்தாஸ் அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவிலும் பெற்றோருடன் சொத்துக்கள் தொடர்பாக மோகன்தாஸ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார்.
தகராறு முற்றவே மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து தனது தாய், தந்தையை சரமாரியாக மோகன்தாஸ் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தாய் அமலோத்பது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை பவுல் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மோகன்தாஸை போலீசார் கைது செய்து உள்ளனர்.