சோனியா காந்தி பிறந்த நாள் விழா
சுரண்டையில் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
சுரண்டை:
சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் விழா, இமாசல பிரதேச காங்கிரஸ் வெற்றி விழா, காங்கிரஸ் கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து இனிப்பு மற்றும் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கினார். சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளிமுருகன், மாவட்ட செயலாளர் சேர்மசெல்வம், பிரபாகர், தெய்வேந்திரன் மற்றும் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர். கடையம் அருகே கோவிந்தபேரியில் சோனியா காந்தி பேரவை மாநில செயலாளர் டி.கே.பாண்டியன், அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இதில் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகன், வெள்ளத்துரை, மாவட்ட பிரதிநிதி நயினார், வட்டார பொருளாளர் அடைச்சாணி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.