சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவீட்


சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவீட்
x

Image Courtesy : PTI 

பொது வாழ்வில் உள்ள அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை,

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சோனியா காந்தி, கடந்த சில நாட்களாக தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து உரையாடி வரும் நிலையில், நேற்று அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து தனிமைப்படுத்திகொண்ட அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர் தற்போது குணமடைந்து வருவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், " கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும். கொரோனா தொற்று முற்று பெறாததால் பொது வாழ்வில் உள்ள அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நேற்று சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story