சொர்ணவாரி பருவ நெல்நடவு பணி தீவிரம்
நெமிலி பகுதிகளில் சொர்ணவாரி பருவ நெல்நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக நவரை பருவ நெல் சாகுபடி முடிந்தது.
தற்போது நெமிலி பகுதிகளில் சொர்ணவாரி பருவ நெல் நடவு பணிகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த பருவத்தில் ஐ.ஆர்.64, எ.டி.டி. 36, ஐ.ஆர். 50, எ.டி.டி.37, எ.எஸ்.டி. 16 உள்ளிட்ட ரகங்கள் நடவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த நடவு பணியில் வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story