தமிழகத்தில் பருத்திக் கழகம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கோரிக்கை


தமிழகத்தில் பருத்திக் கழகம் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் கோரிக்கை
x

நூற்பாலைகள் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் செலவினங்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நூற்பாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் பருத்திக் கழகம் தொடங்கப்பட்டு நியாயமான முறையில் பருத்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறு, குறு, நடுத்தர தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதனை வலியுறுத்தி வரும் 15-ந்தேதி முதல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நூற்பாலை உரிமையாளர்கள், நூற்பாலைகள் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் வங்கிக் கடன் திரும்ப செலுத்துதல், பஞ்சு கொள்முதல் பணம் செல்லுத்துதல், மின்சார கட்டணம், ஜி.எஸ்.டி. போன்ற செலவினங்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.



Next Story