தெற்கு மண்டல முதன்மை வணிக மேலாளர் திடீர் ஆய்வு


தெற்கு மண்டல முதன்மை வணிக மேலாளர் திடீர் ஆய்வு
x

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் தெற்கு மண்டல முதன்மை வணிக மேலாளர் ரவி வல்லூரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல்

முதன்மை வணிக மேலாளர் ஆய்வு

தெற்கு ரெயில்வே மண்டல முதன்மை வணிக மேலாளர் ரவி வல்லூரி நேற்று திடீரென திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் பார்சல் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது திண்டுக்கல்லில் இருந்து வெளியூர்களுக்கு ரெயிலில் சரக்குகள் ஏற்றுமதி செய்தல் குறித்து கேட்டறிந்தார். சரக்கு ஏற்றுமதி மூலம் மாதந்தோறும் கிடைக்கும் வருவாய் பற்றி விசாரித்தார்.

இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து ரெயில்களில் அதிக அளவில் சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் அனைத்து ரெயில்களிலும் சரக்குகளை அனுப்புவதற்கு முயற்சி மேற்கொண்டு ரெயில்வே நிர்வாகத்தின் வருவாயை பெருக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து ரெயில் நிலையத்தில், அனைத்து நடைமேடைகளுக்கும் சென்று உணவு பொருட்கள் விற்கும் கடைகளை ஆய்வு செய்தார்.

உணவு விலை பட்டியல்

அப்போது ரெயில் பயணிகளுக்கு தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும். அதே நேரம் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மேலும் அனைத்து உணவு பொருட்களின் விலை பட்டியலை, ரெயில் பயணிகளின் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதற்கிடையே குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில், திண்டுக்கல்லுக்கு வந்தது. அந்த ரெயிலில் ஏறிய அவர், அதில் உணவு தயாரிக்கும் கேண்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேண்டினை சுகாதாரமாக வைக்கும்படி அறிவுறுத்தினார். மேலும் டிக்கெட் அலுவலகம் உள்பட அனைத்து பகுதிகளிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story