பனை விதைகள் விதைப்பு
உவரியில் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இட்டமொழி:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் சார்பில் உவரி கடற்கரை பகுதிகளில் பனை விதைகள் விதைக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் சி.சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். மாநில நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.செந்தில்குமார், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.வெளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சமூக சேவகர் விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு பனை விதைகள் விதைக்கும் பணியை தொடங்கி வைத்தார். உவரி பஞ்சாயத்து தலைவி தேம்பாவனி, ஊராட்சி செயலர் ஆன்டோ சைமன், பேராசிரியர்கள் சந்திரசேகர், ஒயிட்டன் சகாயராஜ், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பலவேசகிருஷ்ணன் நன்றி கூறினார்.