விண்வெளி கழிவுகளை தடுக்கும் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்


விண்வெளி கழிவுகளை தடுக்கும் சோதனை வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
x

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி குப்பைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது.

சென்னை,

விண்வெளி கழிவுகளை முற்றிலும் தடுக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி குப்பைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. குறிப்பாக கடந்த ஜனவரி 1-ந் தேதி பி.எஸ்.எல்.வி- சி-58 ராக்கெட் மூலம் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 'பி.எஸ்.எல்.வி. ஆர்பிட்டல் எக்ஸ்பரீமென்டல் மாட்யூல்-3' (பி.ஓ.இ.எம்.-3) என்று அழைக்கப்படும் இஸ்ரோவின் விண்வெளி ஆய்வு திட்டம் பரிசோதிக்கப்பட்டது. இந்த சோதனையானது விண்வெளியில், 650 கிலோமீட்டர் முதல் 350 கிலோமீட்டர் வரையிலான சுற்றுப்பாதையில் நடத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் துளி அளவு கூட விண்வெளியில் எந்த பாகத்தையும் மிதக்கவிடாமல் வெற்றிகரமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழைந்தது. இதனால் சுற்றுப்பாதையில் குப்பைகளை முற்றிலும் விடுவது தவிர்க்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் உலக நாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வியக்கவைத்துள்ளதுடன், இதுவொரு முக்கியமான மைல்கல் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.


Next Story