பழுதான மின்கம்பம்


பழுதான மின்கம்பம்
x

பழுதான மின்கம்பம்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சி சி.ஆர்.சி. டெப்போவிலிருந்து கரந்தை வடக்குவாசல் செல்லும் சாலையான சுண்ணாம்பு கால்வாய் தெரு உள்ளது. இந்த தெருவில் டாஸ்மாக் மதுபானக்கடை எதிரே உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். எந்த நேரமும் விழும் நிலையில் உள்ளதால் பொதுமக்கள் நலன் கருதி பழுதான மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அன்பழகன், தஞ்சாவூர்.


Next Story