சிறப்பு அபிஷேகம்


சிறப்பு அபிஷேகம்
x

திருமருகல் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

நாகப்பட்டினம்

திருமருகலில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பெருமாளுக்கு பஞ்சாமிர்தம், பால், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ண மலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் தோப்புத்துறை அபிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில், நாகக்குடையான் சீனிவாசபெருமாள் கோவில், கோவில்பத்து எனையாளும் கண்ணபெருமான் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதேபோல் ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story